திருப்பதியை திணறவைக்கும் கொரோனா: இதுவரை ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்பு

Date:

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3 ஆயிரம் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. அதன் முடிவில், திருப்பதியில் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், மத்திய அரசின் உத்தரவின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள், வியாபாரம் சார்ந்த நிறுவனங்கள் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எங்கும் வெளியில் சுற்றாமல் பேருந்து, ரயில் நிலையங்களுக்குச் சென்று அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்