ஐசியுவில் உள்ள நோயாளிகளுக்கு பாடல் பாடி ஆறுதல் தெரிவிக்கும் நர்ஸ் – வைரலாகும் வீடியோ!

Date:

மருத்துவமனையின் ஐசியு பிரிவில் உள்ள நோயாளிகள், தாங்கள் தனிமையில் இருப்பதாக எண்ணுவதை தவிர்க்கும் பொருட்டு, ஏமி லின் ஹெளசன் என்ற நர்ஸ், கிடாரை இசைத்து பாடல் பாடி, அவர்களுக்கு புத்துணர்வு ஊட்டி வருகிறார். இந்த வீடியோ, இணையத்தில், நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால், சர்வதேச நாடுகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், ஆங்காங்கே நடைபெறும் இதுபோன்ற செயல்கள், இந்த மண்ணில் இன்னும் மனிதநேயம் நிலைத்திருக்கின்றன என்பதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது எனலாம்.

கனடா நாட்டின் ஒட்டாவா நகரத்தில் உள்ள மருத்துவமனையின் நர்ஸ், ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், கிடாரை இசைத்தவாறே, “You are not alone”. Thank you for lifting our spirits, Amy-Lynn!,” என்று பாடல் பாடி, நோயாளிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார்.

ஏப்ரல் 24 ஆம் தேதி, இந்த வீடியோ, டுவிட்டரில் பதிவிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை, இந்த வீடியோ பார்வை இடப்பட்டுள்ளது. நர்ஸின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஏமி லின் ஹெளசன் நர்ஸ், சமீபத்தில் தான் எண்டோஸ்கோபி பிரிவில் இருந்து ஐசியு நோயாளிகளின் கண்காணிப்பிற்காக மாற்றப்பட்டு உள்ளார். ஐசியு பிரிவில் உள்ள நோயாளிகள், தாங்கள் தனிமையில் இருப்பது போன்ற உணர்வில் இருந்து உள்ளதால், அவர்களின் மனநிலையை மாற்றும் நோக்கத்தில் இந்த புதுமுறையை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்