நேற்று 11 மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (30) அறிவித்தார்.

இதன்மூலம், இதுவரை உறுதிசெய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் உக்கிர மாரடைப்பு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 புப்லுசிய சிண்ட்ரோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இங்கிரிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார், இவரது மரணம் நேற்று முன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் சுவாசத் தொகுதியில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்றுமுன்தினம் (29) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் சிக்கலடைந்த ஈரல் நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 64 வயதான பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கும் அங்கிருந்து அநுராதபுரம் மெத்சிறி செவண சிகிச்சை நிலையத்திற்கும் மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட உக்கிர சுவாச பிரச்சினை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 94 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரகஸ்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு, கொவிட்-19 தொற்று மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சுவாச பிரச்சனை மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்