கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு
இறந்த கோழிகளுடன் சென்ற வைத்தியசாலை அருகில் வசிக்கின்ற பெண் ஒருவர்
இறந்த நிலையில் தான் கொண்டு சென்ற நான்கு கோழிகளை வெளிநோயாளர்
பிரிவிற்குள் எறிந்து விட்டுச் சென்றுள்ளார்.
இதன் போது அவர் அங்கிருந்த பணியாளர்களை நோக்கி, வைத்தியசாலையில் நீங்கள்
வளர்க்கும் நாய்கள்தான் எனது கோழிகளை பிடித்து கொன்றுவிட்டது எனக்
கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் வீதிகளில் உள்ள தெரு நாய்களே குறித்த கோழிகளை பிடித்ததாகவும்
வைத்தியசாலையில் நாய்களை வளர்ப்பதில்லை எனவும் தெரிவித்த பணியாளர்கள்
குறித்த பெண்ணின் செயற்பாடு தொடர்பில் தர்மபுரம் பொலீஸ் நிலையில்
முறைப்பாடு செய்தும் பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்
தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1
2