உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் காத்தான்குடி பகுதியில் வெடிகுண்டு சோதனை நடத்துவதற்கு இந்த நபர் வெடிமருந்து வழங்கியுள்ளார்.
28 வயதுடைய காத்தான்குடி பகுதியை சேர்ந்த ராஸிக் ராஸா எனும் நபர் சில மாதங்களின் முன் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த சந்தேக நபரை மீண்டும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
சஹ்ரானின் சகோதரன் மொஹமட் ரில்வானிற்கு தான் வெடிபொருட்களை வழங்கியதாக ரசாக் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை வெடிப்பில் ரில்வான் காயமடைந்தார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.