ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி உருவாக இருக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பவித்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா. இந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டும் செய்யப்பட்டார். அதன் பிறகு வைல்டு கார்டு மூலமாக மறுபடியும் வந்து 5ஆவது பைனலிஸ்டாக வந்தார். ஆனால், இறுதியில், தோல்வியுற்று வெளியேறினார்.

இந்நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோரது கெமிஸ்டரி ரசிகர்களுக்கு விருந்தாக இருந்த து. புகழின் மூலமாக அதிகளவில் பிரபலமும் ஆனார் பவித்ரா. இந்நிகழ்ச்சியின் மூலமாக தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் கதிர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், புதுமுக இயக்குநர் இந்தப் பட த்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு, ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




