யாழ் நகரில் குடும்பத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்: புலனாய்வு பிரிவு மீது குற்றச்சாட்டு!

Date:

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வெள்ளாந் தெருவில் குடும்பத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கொலைவெறிக் கும்பல் வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கியுள்ளன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்று தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

வீட்டின் ஒழுங்கையில் மதுபோதையில் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்தனர் என தெரிவித்து, அவர்கள் மீது வீதியால் சென்ற இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தை பார்த்ததும், அந்த இடத்திற்கு சென்று பிரச்சனையை தீர்த்துவைக்க முயன்றேன். தாக்குதல் நடத்தியவர்களிடம், நீங்கள் யார் எனக் கேட்டேன்.

அவர்கள் தம்மை புலனாய்வு பிரிவினர் என தெரிவித்து அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தனர். அதனை நான் படம் எடுத்தேன். அவர்களது மோட்டார் சைக்கிளையும் படம் எடுத்தேன். இந்த நிலையில் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 7,8 மோட்டார் சைக்கிளில் வந்த 15 – 20 பேர் என் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

என் கைபேசி எங்கே என்று கேட்டனர். நான் கொடுக்க மறுத்த போது இன்னும் கடுமையாக தாக்கினர். வீட்டில் இருந்த பொருட்களால், போத்தல்களால் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். பின்னர் கைபேசியை பறித்துச் சென்றனர். வீட்டிலிருந்த சங்கிலியையும் எடுத்துச் சென்றனர்.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற உடனேயே யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றேன். அவர்கள் மறுநாள் காலையில் முறைப்பாடு பதிவு செய்ய வருகிறோம் என தெரிவித்தனர். மறுநாள் காலையில் சிவில் உடையில் வந்த போலிசார், வீட்டில் பொருட்கள் உடைந்திருந்ததை படம் எடுத்தனர். அந்த பொருட்களை வாங்கித் தந்தால் போதுமானது தானே என்ற கோணத்திலேயே கதைத்தனர். முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை ஆரம்பித்துள்ள ஆணைக்குழு, யாழ்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்

spot_imgspot_img

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்