கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முடக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் மே1 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கவுள்ளது.
இந்நிலையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் 30 ஆயிரம் பாட்டில்களில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட தடுப்பு மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிர்சாதன வாகனம் மூலம் தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1