கனடாவில் கொரோனா கட்டுப்பாட்டு பணியில் இராணுவம் களமிறக்கப்படவுள்ளது.
கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒன்டாரியோ மாகாணத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் மருத்துவமனைகளில் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
எனவே மருத்துவமனையில் பல்வேறு பணிகளை பகிர்ந்து பணிபுரிவதற்கு கனடாவின் இராணுவ படைகளை கண்காணிக்கும் மருத்துவக் குழுக்களை களத்தில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் சிக்கலை கட்டுப்படுத்துவதற்கு கனடிய ராணுவப் படைகளின் 3 மருத்துவக் குழுக்கள் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த அறிக்கையை பொது பாதுகாப்பு துறை அமைச்சர் பில் பிளேர் வெளியிட்டுள்ளார். மேலும் களத்தில் பங்கேற்க உள்ள இந்த மூன்று மருத்துவ குழுக்கள் அனைத்து மருத்துவ சேவைகளையும் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த திட்டமானது ஒன்டாரியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா டோன்ஸின் கோரிக்கைக்கு இணங்க இறுதியாக தீர்மானம் செய்யப்பட்டதாக அரசாங்கம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சுலபமாக கையாள இயலும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று வெளியிட்டுள்ளனர்.




