அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவரை சிறைப்பிடித்து ஊழியர்கள் போராட்டம் (VIDEO)

Date:

அரசாங்க பொறியில் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, ஊழியர்கள் சிறைப்பிடித்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பிரதான அலுவலகத்தில் உள்ள தலைவரின் அலுவலகத்திற்குள் அவர் நீண்டநேரமாக தடுத்து வைககப்பட்டார்.

மாதாந்த சம்பளக் கொடுப்பனவு உரிய திகதியில் வழங்கப்படாத விவகாரம் பின்னர் அமைதியின்மையாக மாறியது.

அங்கு பொலிசார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் சங்கத்தின் செயலாளர் வசந்த கருணாதிலக கருத்து தெரிவித்த போது, ​​புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து சம்பளக் கொடுப்பனவுகள் தாமதமாகிவிட்டதாகவும், இது தொடர்பில் பேச்சு நடத்த ஊழியர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லையென கூறினார்.

சம்பளக் கொடுப்பனவுகளுக்கான ஒரு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்குமாறு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை, தலைவர் சாதகமாக பரிசீலிக்கவில்லை.

அவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தபோது, ​​தலைவர் அதை அடக்கும் விதமாக பொலிசார், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களை அழைத்ததாக தெரிவித்தார்.

ஊழியர்கள் ஒரு நியாயமான தீர்வையும், ஏப்ரல் சம்பள கொடுப்பனவுகள் எப்போது செய்யப்படும் என்பதற்கான பதிலையும் மட்டுமே கோருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்