25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிசிசிஐ கெடுபிடிகளை அதிகரிக்க திட்டம்!

இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்த பிசிசிஐ போராடி வருகிறது. திட்டமிட்டபடி எந்தவித தடங்கலும் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த கெடுபிடிகளை தாங்காமல் சில வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகியதையும் காணமுடிந்தது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கெடுபிடிகளை மேலும் அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியிலிருந்து வரும் உணவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த அனுமதி தற்போது பின்வாங்கப்படுகிறது.

அதேபோல நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வளையம் மேலும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 1ஆம் தேதி முதல் இந்திய வீரர்களுக்கு தடுப்பூசியில் வழங்க திட்டமிட்டுள்ளோம். மற்ற வீரர்களின் அவர்களின் சொந்த முடிவாகும். இந்திய வீரர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சுமார் 7 வாரங்களுக்கு மேல் நடக்கிறது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி துவங்கிய இந்த தொடர்வரும் மே மாதம் 30ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் தற்போதைய நிலையில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் பங்கேற்று அதில் 5ல் வெற்றி பெற்று நம்பர் -1 இடத்தில் உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment