மூளை பக்கவாதம் காரணமாக அண்மையில் உயிரிழந்த நடன இயக்குநர் கிஷோர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய நடிகர் ஜெயம் ரவி முன்வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான பூமி படம் கொரோனா லாக்டவுன் காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. விவசாயத்தை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஒரு விவசாயியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், அஹமது இயக்கத்தில் உருவாகி வரும் ஜன கண மன என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் மூளை பக்கவாதம் காரணமாக உயிரிழந்த நடன இயக்குநர் கிஷோர் குடும்பத்திற்கு நிதியுதவி உள்பட பல உதவிகளை செய்வதற்கு ஜெயம் ரவி முன்வந்துள்ளார். ஜெயம் ரவி உள்பட மாஸ் ஹீரோக்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துள்ளார் நடன இயக்குநர் கிஷோர்.
பொதுவாகவே சினிமாவில் நடிகர், நடிகைகைகள், இயக்குநர், தயாரிப்பாளர்கள், காமெடியன்களைத் தவிர மற்ற துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், நடன இயக்குநர்கள் என்று யாரையுமே அறிந்து கொள்வதில்லை. அவர்களது கஷ்டங்களும் யாருக்கும் தெரிவதில்லை. நடன இயக்குநர் கிஷோர் போன்று இன்னும் எத்தனையோ நடன இயக்குநர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.