நெல்லியடியில் முகக்கவசம் அணியாமல் நடமாடியவர்கள் கைது!

Date:

நெல்லியடி நகரில் கொரோனா தடுப்பு செயற்திட்டத்தில் பொலிசார் இன்று ஈடுபட்டனர். இதன் ஒரு கட்டமாக நகரில் முகக்கவசம் அணியாமல், முறையாக அணியாமல் பயணித்தவர்களை கைது செய்யும் நடடிக்கையும் மேற்கொண்டனர்.

கடந்த ஒரு வாரமாகவே நெல்லியடி நகரில் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டனர். முக்கவசம் அணியாவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், நெல்லியடி சந்தியில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களை கைது செய்தனர்.

முழுமையாக முகக்கவசம் அணியாத 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாத பலர் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைதான நான்கு பேர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்