நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று, கொழும்பு மாவட்டத்திலிருந்து 200 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் நேற்று இலங்கையில் பதிவாகினர்.. நேற்று 1,111 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பிற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகினர். அங்கு, 198 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 119 பேரும், காலி மாவட்டத்தில் 86 பெரும், கண்டி மாவட்டத்தில் 74 பேரும், களுத்துறை மாவட்டத்தில்  70 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 41 பேரும், மாதத்தறை மாவட்டத்தில் 38 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 32 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 28 பேரும், பதுளை மாவட்டத்தில் 20 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேரும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து தலா 15 பேரும், 15 வெளிநாட்டிலிருந்து வந்த 15 பேரும்,  கேகாலை மாவட்டத்தில் இருந்து 14 பேரும், யாழ் மாவட்டத்தில் இருந்து 9 பேர், புத்தளம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா 8 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 7 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 3 பேர், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக...

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு...

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்