நாட்டில் நேற்று 1,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். COVID-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை இலங்கை முதன்முறையாக உறுதிப்படுத்தியது.
பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 1,089 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், சிறைக் கொத்தணியிலிருந்து 7 தொற்றாளர்கள், வெளிநாட்டிலிருந்து வந்த 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 103,487 ஆக அதிகரித்துள்ளது.
7,976 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 279 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,856 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 721 பேர் கண்காணப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1