சகோதரியை கொன்று நகை திருடிய அண்ணன் கைது!

Date:

புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை பொன்நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகப்பிரியா (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (27) சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த லோகப் பிரியாவை, மர்மநபர்கள் படுகொலை செய்து, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

மாலையில் சிவகாமி வீட்டிற்கு திரும்பியபோது, லோகப்பரியா கொலை செய்யப்பட்டிருந்தார். தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லோகபிரியாவின், பெரியம்மா மகன் சுரேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக அவர் லோகப் பிரியாவை கைதுசெய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுரேஷை கைதுசெய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்