வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடக்கில் இன்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 660 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் 2 பேர், கரவெட்டி, கோப்பாய், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்