தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விவேக். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மனதில் உறுதி வேண்டும் என்ற பட த்தின் மூலமாக சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு புது புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கேலடி கண்மணி, செந்தூர தேவி, நண்பர்கள் என்று வரிசையாக 1987 ஆம் ஆண்டுகளில் இருந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, அஜித், விக்ரம், கமல் ஹாசன், விஜய், சூர்யா, பிரசாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது கூட, ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 பட த்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், அவரது அஸ்தி சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகிலுள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உறவினர்கள் மரியாதை செலுத்திய பின், அஸ்தி குழிதோண்டி மண்ணில் புதைக்கப்பட்டது. அஸ்தி புதைக்கப்பட்ட இடத்தில், மரக்கன்றுகளை நட்டு வைத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இனி, மண்ணில் இருந்து கொண்டு அவர் விடும் மூச்சுக்காற்று மூலமாக இந்த மரம் வளரும் என்றும், விவேக்கின் நினைவாக இந்த கிராமத்தில் அந்த மரம் இருக்கும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.