பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 3ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

Date:

பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,95,022 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 12% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்