31.9 C
Jaffna
April 28, 2024
இந்தியா

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா; 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம்!

நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை செய்த பிறகு, 15 சதவிகிதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால், இந்தப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாய்க்கு புலி வேஷம்: மர்ம நபர்களை தேடும் போலீஸார்

Pagetamil

அதிக நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய 48 வயது காதலியை கொன்ற 28 வயது இன்ஸ்டா காதலன்!

Pagetamil

நடு வீதியில் ஆம்லெட் போட்டவர்களால் பரபரப்பு!

Pagetamil

காங்கிரஸில் இணைகிறார் மன்சூர் அலிகான்

Pagetamil

‘என் மரணத்துக்கு குடும்பம்தான் காரணம்’: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!

Pagetamil

Leave a Comment