தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறும் பாதை இன்று (28) காலை 6.00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்.
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையின் பற்றுச்சீட்டு வழங்கும் 3 ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, பற்றுச்சீட்டு வழங்கும் பகுதி மூடப்பட்டு, வெளியேறும் இடத்தை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாவவில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையின் நுழைய வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கட்டணம் அறவிடப்படாது. ஆனால் அதிருகிரிய மற்றும் கஹதுடுவ வெளியேறும் பாதைகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், பேருந்துகள் மற்றும் நோயாளர் காவு வணடிகள் வெளியேற பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1