முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தின் போது தீ மிதித்து எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இருவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
குரவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி விழா நேற்று முன்தினம் (26) நடைபெற்று வந்ததுள்ளது. இரவு நிகழ்வின் போது பக்த்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளார்கள்.
இதன் போது தீ மிதித்து எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு ஆண்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்டு அங்க சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
குரவில் பகுதியினை சேர்ந்த 31,38 வயதுடைய ஆண்களே இவ்வாறு எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.