முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டம் பகுதியில் இடம்பெற்றது
குறித்த அமைப்பு நீண்டகாலமாக புணரமைக்கப்படாமை காரணமாக குறித்த அமைப்பை புணரமைக்குமாறு விவசாயிகளால் பல்வேறுதரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது இந்நிலையில் குறித்த விவாசாயிகளில் விருப்புக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியேகத்தரின் நடவடிக்கை தொடர்பில் முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய விவசாயிகள் விசனம் வெளியிட்டிருந்தார்கள்
மக்கள் கமக்கார அமைப்பு விதிமுறைகளை மீறி நீண்ட நாளாக (சுமார் 3 வருடங்களுக்கு மேலாக) நிர்வாக தெரிவு இடம் பெறாமையை சுட்டிக்காட்டி அமைப்பினை புதுப்பிக்குமாறு கூறியதற்காக முத்துஐயன்கட்டு வலதுகரை 03 ஆம் கண்டத்திற்குரிய கமக்கார அமைப்பின் பொதுக் கூட்டத்தினையும் நிர்வாகத் தெரிவினையும் கற்சிலை மடு பிரதேத்தில் அதாவது ஒரே கிராம அலுவலர் பிரிவின் இன்னொரு கிராமத்தின் கமக்கார அமைப்பின் எல்லைக்குள் வைப்பது ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரின் பக்கசார்பான நடவடிக்கை என 03 ஆம் கண்டம் வலது கரை கமாக்கார அமைப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இது குறித்து ஒட்டுசுட்டான் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் 03 ஆம் கணட கமக்கார அமைப்பின் புதிய நிர்வாக தெரிவினை கடந்த காலங்களில் 03 ஆம் கண்டத்தில் வைத்து வந்துள்ள நிலையில் இம்முறை திட்டமிட்டு இன்னெரு கமக்கார அமைப்பான கற்சிலைமடு கமக்கார அமைப்பின் எல்லைப்பகுதியில் உள்ள கற்சிலைமடு பொதுநோக்கு மண்டபத்தில் வைப்பது அவரின் பக்க சார்பான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டி மாவட்ட அரசாங்க அதிபருக்கு 03 ஆம் கட்ட கமக்கார அமைப்பின் அங்கத்தவர்கள் கடிதம் ஒன்றினை வழங்கி தமக்கு நல்லதொரு தீர்வினை தருமாறும் கோரியிருந்தனர்
இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலையீட்டினால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய இன்று குறித்த புதிய நிர்வாக தெரிவு கூட்டம் 3 ஆம் கண்டம் பகுதியில் இடம்பெற்றது
இதில் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது ஏற்கனவே இருந்த கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் பதவிகளுக்காக போட்டியிட்டபோதும் அவர்கள் வாக்களிப்பில் மூலம் தோற்கடிக்கப்பெற்று புதியவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்