ரிஷாத்திற்கு ஆதரவாக கல்முனை மாநகரசபையில் கருப்பு சால்வை

Date:

அண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சகலரும் கருப்புச்சால்வை அணிந்து தமது எதிர்ப்பை இன்று சபை அமர்வில் வெளிக்காட்டினர்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (28) மாலை சபா மண்டபத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப்பின் தலைமையில் கூடிய போதே இவ்வெதிர்ப்பை வெளிக்காட்டினர். கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான பீ. எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப், எ.சீ.எம். முபீத், ஏ.ஆர். பஸீரா, ஏ.சமீனா ஆகியோர் சால்வை அணிந்து எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் முதல்வர் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், தேசிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் கருப்பு பட்டி அணிந்து கைதுக்கு எதிரான மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்திற்க்கு தமது ஆதரவை வெளிக்காட்டினர்.

கைது தொடர்பிலான கண்டன உரைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.எம். முபீத், பி.எம். ஷிபான், எம்.ஐ.எம்.ஏ. மனாப் ஆகியோர் நிகழ்த்தினர். மேலும் முதல்வர் உட்பட பல உறுப்பினர்களும், விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவில் கதிரவன் கலைக்கழகத்தின் 196 ஆவது பட்டிமன்றம்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின்...

வெவ்வேறு காலகட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்… மயானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்: செம்மணி புதைகுழி அறிக்கையின் முழுமையான தொகுப்பு!

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்