துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா ..

Date:

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,67,281 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 29ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை துருக்கியில் முழு பொதுமுடக்கம் இருக்கும் என்றும், நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைப்பதே தற்போதைய இலக்கு என்றும் துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.

ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு முன் அனுமதியுடன் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்றும், மாகாணங்களுக்கு இடையே 50 சதவீத பொதுப் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படும் என்றும், பள்ளிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...

மீண்டும் இணைய குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் சிக்கினர்

சைபர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிசர இடைநிலை முகாமில்...

‘திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?’ : மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வன் நேற்று காலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்