முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொலிசாரால் கடந்த 19.04.21 அன்று குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்னிலையில் குறித்த நபருக்கு வவுனியா சிறைச்சாலையில் கடந்த 20.04.21 அன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு 23.04.21 அன்று வெளியாகியுள்ளது இதில் சின்னச்சாளம்பனை சேர்ந்த குறித்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியினை கைதுசெய்த பொலிசார் அவருடன் சம்மந்தப்பட்டவர்கள், நீதிமன்ற வாளகத்தில் அவருடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாருக்கு 24-04-2021 அன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது