ஆடை வாங்க வந்து கடை உரிமையாளரின் பேர்ஸை ஆட்டையை போட்ட இளைஞனுக்கு வலைவீச்சு!

Date:

ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வந்து, கடை உரிமையாளரின் கைப்பையை (பேர்ஸ்) திருடிச் சென்ற இளைஞரை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான இளைஞர், கடை உரிமையாளரின் பையை (பேர்ஸ்) திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.

இதனை பயன்படுத்தி குறித்த இளைஞனை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கைப்பையில் 20,000 ரூபாய் பணமும், சில முக்கியமான ஆவணங்களும் காணப்பட்டதாக தெரிவித்த அதன் உரிமையாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்