யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதி பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். பொதுமக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதோடு யாழ் நகரப் பகுதிகளில் சன நெரிசலை தடுக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சநிலையடைந்தனர்.

