மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்ந்து இயங்குமா?: இன்று இறுதி முடிவு

Date:

மத்திய மாகாணத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வது குறித்து,  ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் இன்று கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

மாகாண கொரோனா கட்டுப்பாட்டு குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, ஆளுனர் தலைமையில் கூடவுள்ளதாக,  மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், கொரோனா வைரஸ் நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.

மத்திய மாகாணத்தில் உள்ள பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். என்றாலும், இன்று பாடசாலைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அவர் கூறினார்.

மதியம் 2:30 மணிக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட சுகாதார பிரிவுகளுடன் கூட்டம் நடைபெறும். கொரோனா வைரஸ் பரவிய பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் மதிப்பீடுகள் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்