மண்டேலா திரைப்படத்தில் எமது தொழிலை இழிவுபடுத்தும் காட்சிகள்; திரையிட்டால் எதிர்ப்போம்: வடமாகாண அழகக சங்கங்கள் எதிர்ப்பு!

Date:

தென்னிந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை இரத்து செய்ய வேண்டுமென வடமாகாண அழகக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தென் இந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தென்னிந்தியாவில் போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாமும் மண்டேலா திரைப்படத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதோடு திரைப்படமானது இலங்கையில் திரையிடும் போது எமது தொழிலை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்காவிட்டால் நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்