கோவையில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால் பொலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, பொலீசார் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகனசோதனையில் ஈடுபடு வருகிறார்கள். அதுபோல் வாகன ரோந்து பணிகளிலும் பொலீசார் ஈடுபடு வருகிறார்கள்.
பொதுமக்கள் மருத்துவ சேவைகளுக்காகவும், இரவுநேர பணியாளர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிவழங்கி வருகிறார்கள். மருத்துவ சேவைக்காக இரவில் வெளியேவருபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் வைத்திருப்பது அவசியம், அதுபோல் இரவுநேர பணிகளுக்கு செல்பவர்கள் நிறுவனத்தின் அடையாளஅட்டை வைத்திருப்பது அவசியம், தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.