Pagetamil
உலகம்

கொரோனா அலை தீவிரமாக இருப்பதால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான விமானங்கள் ஈரான் ரத்து!

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டதைவிட ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அந்த வைரஸ் ஈரானுக்குள் நுழைந்தால் நாம் இன்னும் பல ஆபத்துகளைச் சந்திப்போம். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான விமானப் பயணத்தை ரத்து செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கொரோனா தெரிவித்துள்ளது. அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. வங்கதேசமும் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

Leave a Comment