மாத்தளை, ரத்தோட்ட பகுதியில் காட்டு பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மனித உடலின் எச்சங்கள் குறித்த மர்மத்தை பொலிசார் துலக்கியுள்ளனர்.
தலங்கம, தலஹேன பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபரே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி எரிந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
வெல்லவாய எத்திலிவெவ பகுதியை சேர்ந்த சந்தன திலக் ராஜபக்ஷ (46) என்ற அந்த தொழிலதிபர், கொழும்பு, மாலபே பகுதியில் தற்போது வசித்து வருகிறார்.
அவரது வாகனம் ஏப்ரல் 23ஆம் திகதி அனுராதபுரத்தில் மீட்கப்பட்டது.
அவர் தலங்கம, தலஹேன பகுதியில் கட்டிட கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொழிலதிபரின் தாய் மற்றும் தந்தைக்கு மாத்தளை பொது மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அங்கு அவர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, இறந்தவரின் இரத்த மாதிரிகளுடன் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.