25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
விளையாட்டு

இரண்டாவது லீக் போட்டிகளில் பங்கேற்க சிஎஸ்கே அணி மும்பையிலிருந்து டெல்லிக்கு முழு பாதுகாப்புடன் பயணம்..

தங்களது இரண்டாவது லீக் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு முழு பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் 5 போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் பங்கேற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

டெல்லி கேப்டல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் மும்பையில் பங்கேற்ற முதல் லெக் போட்டிகளை முடித்துக்கொண்டு தற்போது டெல்லியில் நடக்க இருக்கும் இரண்டாவது லெக் போட்டிகளில் பங்கேற்க முழு பாதுகாப்பு அம்சங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று டெல்லி புறப்பட்டனர்.

இதில் கேப்டன் மகேந்திர சிங் தோனி நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ ஆகியோர் காணப்பட்டனர். டெல்லியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த நான்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பணியாளர்களுடன் சென்றதை காண முடிந்தது. இதற்கிடையில் தோல்வியை சந்தித்த பெங்களூர் அணியின் வெற்றி பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடித்து வைத்தது.

இதில் ரவிந்திர ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிராக 62 ரன்கள், 3 விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் என ஆல்-ரவுண்டராக அசத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பதிவு செய்தது. மேலும் ரவீந்திர ஜடேஜா தனியாளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மீண்டும் சன்ரைசர்ஸ் என 4 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் முழு பாதுகாப்புடன் வேறு ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிபிஇ கிட்ஸ் அணிந்து பயணித்துள்ளனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment