மத்திய மாகாணத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வது குறித்து, ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் இன்று கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
மாகாண கொரோனா கட்டுப்பாட்டு குழு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு, ஆளுனர் தலைமையில் கூடவுள்ளதாக, மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், கொரோனா வைரஸ் நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.
மத்திய மாகாணத்தில் உள்ள பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். என்றாலும், இன்று பாடசாலைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அவர் கூறினார்.
மதியம் 2:30 மணிக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட சுகாதார பிரிவுகளுடன் கூட்டம் நடைபெறும். கொரோனா வைரஸ் பரவிய பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் மதிப்பீடுகள் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.