26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

Video Call வழியா ரொம்ப நேரம் Class, Meeting நடக்குதா? டேட்டா நுகர்வு மட்டுப்படுத்தப்படுவதை சாத்தியமாக்கும் முறை…

உலகின் மாபெரும் இணைய தேடல் நிறுவனமான கூகுள், இந்த வார தொடக்கத்தில், அதன் வீடியோ கான்பரன்சிங் டூல் ஆன கூகுள் மீட்டில் ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதாகவும், அது பயனர்கள் ஆப்பின் டேட்டா நுகர்வு மட்டுப்படுத்தப்படுவதை சாத்தியமாக்கும் என்றும் கூகுள் அறிவித்தது.]

சுவாரசியமான இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

கூகுளின் கூற்றுப்படி, இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போது, இது டேட்டா பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பேட்டரியின் குறைந்த பயன்பாட்டையும், மொபைலின் CPU-வின் தேவையையும் குறைக்கிறது.

“கூகுள் மீட் தானாகவே உங்கள் சாதனம், நெட்வொர்க் மற்றும் அமைப்பை சரிசெய்து சிறந்த மீட்டிங் அனுபவத்தை வழங்குகிறது. இருப்பினும், உங்கள் மொபைல் சாதனத்ம் வழியிலான தாக்கத்தை குறைக்க உங்கள் மீட்டிங்கின் தரத்தை இன்னும் மெருகேற்ற இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று நிறுவனம் ஒரு பிளாக் போஸ்ட்டில் கூறி உள்ளது.

இந்த புதிய கூகுள் மீட் தரவு சேவிங் பயன்முறையை இயக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

1. மீட் ஆப்பைத் திறக்கவும்

2. மெனுவை கிளிக் செய்யவும்

3. செட்டிங்ஸ்-க்குச் செல்லவும்

4. Limit data usage விருப்பத்தை ஆன் செய்யவும், அவ்வளவுதான்

இந்த அம்சத்திற்கு அட்மின் கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை, இது எசென்ஷியல்ஸ், பிசினஸ் ஸ்டார்டர், பிசினஸ் ஸ்டாண்டர்ட், பிசினஸ் பிளஸ், ஃப்ரண்ட்லைன், எண்டர்பிரைஸ் ஸ்டாண்டர்ட், எண்டர்பிரைஸ் பிளஸ், எஜுகேஷன் பேஸிக்ஸ், எஜுகேஷன் பிளஸ், நான்-ப்ராபிட்ஸ், கிளவுட் ஐடென்டிட்டி ப்ரீ, கிளவுட் ஐடென்டிட்டி பிரீமியம் ஆகியவற்றின் அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும்.

இந்த அம்சம் அனைத்து கூகுள் G Suite Basic மற்றும் Business வாடிக்கையாளர்களுக்கும்அணுக கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment