செய்வினை, பில்லி, சூனியத்திற்கு பரிகாரம் செய்யும் பெண்ணின் பேச்சில் நம்பி, தம்பதியொன்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. கிளிநொச்சியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதிகமாக வளர்ந்து விட்டதென சொன்னாலும், இப்பொழுதும் விபரீதமான மூடநம்பிக்கை- சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படியொரு சம்பவம் பற்றிய செய்திக்குறிப்பே இது.
கிளிநொச்சியை சேர்ந்த தம்பதியொன்று, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது. தனக்கு ஏற்பட்ட நோய் ஒன்றிற்கு மனைவி செய்வினை செய்தமையே காரணமென கணவன் நம்பியதால், இந்த விவாகரத்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கணவன், அவரது சில சகோதரர்கள் அயல் காணிகளில் வசித்து வருகிறார்கள்.
கணவன் அண்மையில் தீவிரமாக நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றதுடன், பரிகாரமும் செய்யும் முயற்சியில் இருந்தனர். இதற்காக பலரையும் அணுகிய போது, இது செய்வினையால் நடந்ததாக அவர்கள் கூறினர். எனினும், அவர்களின் பரிகாரங்கள்பலனளிக்கவில்லை.
இதையடுத்து, திருகோணமலையிலுள்ள பெண்ணொருவரை பற்றி கேள்விப்பட்டு, பரிகாரத்திற்காக அவரிடம் சென்றுள்ளனர்.
அவர் பரிகாரத்திற்காக பெருந்தொகை பணத்தை அறவிட்டுள்ளார். கிளிநொச்சிக்கும் சில தடவை வந்து பரிகார பூஜைகளில் ஈடுபட்டார்.
பின்னர் அந்த தம்பதி, அயலிலுள்ள கணவரின் சகோதரிகள் அனைவரையும் திருகோணமலைக்கு அழைத்துள்ளார்.
அங்கு அவர்களிற்கு தடல்புடலான விருந்து வழங்கப்பட்டுள்ளது . சாப்பிட்டு முடிந்ததும், அனைவரையும் வாந்தி எடுக்குமாறு கூறிியுள்ளார்.
ஒவ்வொருவரின் வாந்தயின் நிறங்களை அவதானித்த பெண், பாதிக்கப்பட்டவரின் மனைவியின் வாந்தி கருப்பு நிறமாக உள்ளது, அவரே சூனியம் செய்தார் என்றார்.
இதை அந்த குடும்பத்திலுள்ள அனைவரும் நம்புகிறார்கள்.
இதை தொடர்ந்தே விவகாரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.