மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பகுதிகளிலுள்ள கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்படுவதாக கொழும்பு ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1