நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 30 பயங்கரமான குற்றவாளிகளை பூசா உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்ற சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் உள்ள செல்களின் எண்ணிக்கையை 76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக பூசா சிறைச்சாலையில் 46 கைதிகளை தங்க வைக்கும் செல்கள் இருந்தன. தற்போது, கூடுதலாக 30 செல்கள் அமைக்கப்படுகின்றன.
அதன்படி, மோசமான பாதாள உலக குற்றவாளிகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் தற்போது மற்ற சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பூசாவுக்கு மாற்றப்படுவார்கள்.
24 மணித்தியாலங்களும் சி.சி.டி.வி அமைப்பு மற்றும் எஸ்.டி.எஃப் பாதுகாப்பு, மொபைல் போன்களைப் பயன்படுத்தும் எந்தவொரு கைதியையும் கண்காணிக்க பூசா சிறைச்சாலையில் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, கஞ்சிபானைய் இம்ரான், வெல சுதா, கொஸ்கொட தாரக மற்றும் போடி லெஸி போன்ற கடுமையான குற்றவாளிகள் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.