மேலும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன!

Date:

கம்பஹா, களுத்துறை, திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) இரவு 8 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் கொட்தெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலுகெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு, பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம்புள்ள பொருளாதர மத்திய நிலையம் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வருட சதி: பிள்ளையானுக்கு எல்லாம் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது...

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்