♦இலங்கையில் இன்று 952 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 102,331 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,110 ஆக உயர்ந்துள்ளது.
♦கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 266 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,577 ஆக உயர்ந்தது.
♦திருகோணமலை, கம்பஹா, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.
♦மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள், கத்தோலிக்க பாடசாலைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்பட்டன.
♦மொனராகலை, சியம்பலந்துவ மற்றும்புத்தள கல்வி வலயங்களில் உள்ள 15 பாடசாலைகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும்.
♦பத்தரமுல்லையிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்த அலுவலகம் ஏப்ரல் 27, 28 ஆம் திகதிகளில் மூடப்படும்.
♦நாளை (27) முதல் அனைத்து அரசு நிறுவனங்களின் செயற்பாட்டிற்கும் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து, சுழற்சி முறையில் ஊழியர்களை பயன்படுத்தும் அதிகாரம், அந்தந்த நிறுவன தலைவர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதற்கான சுற்றறிக்கை நாளை வெளியாகும்.
♦தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுமென இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
♦நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா நோயாளிகளிற்கான படுக்கைகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
♦வடக்கில் இன்று 15 பேருக்கு தொற்று உறுதியானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.