இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து

Date:

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்று (25) ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து தீக்கிரையாகின.

இந்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 9வது இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

இவர்களுக்கு இதுவரை எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றதோடு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் வந்து பார்க்கவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்-

 

spot_imgspot_img

More like this
Related

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்