ஆடைத் தொழிற்சாலையை மூடக்கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்!

Date:

பிங்கிரிய-விலாட்டவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை மூடக் கோரி கிராம மக்கள் வீதிக்கு இறங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள போதிலும், தொழிற்சாலை மூடப்படாமல் இன்னும் செயல்பட்டு வருவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் வசிப்பதால் தமது பிள்ளைகள் பாடசாலைகளில் அனுமதிக்கப்படவதில்லையென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொழிற்சாலை தொடர்ந்து இயங்கினால் தங்கள் கிராமம் பெரும் ஆபத்தில் இருக்கும் என்றும், தொழிற்சாலையை இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கிராம மக்கள் கூறினர்.

கடந்த சில நாட்களில், அந்த தொழிற்சாலையில் இருந்து 142 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னர் தொழிற்சாலையை மூடுவதை பற்றி இன்று மாலை முடிவெடுப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, போராட்டம் முடிந்தது.

பதற்றமான நிலைமையைடத்து பிங்கிரய, தும்மலசூரிய, ஹெட்டிபொல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்