முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்; விசாரணை தீவிரம் (PHOTOS)

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாக உள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (25) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது

இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வபுரம் முல்லைத்தீவை சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் எனவும் காயமடைந்த நபர் வட்டுவாகல் முல்லைத்தீவைச் சேர்ந்த 20 வயதுடைய செல்வகுமார் சயந்தரூபன் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந் இளைஞனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெடிப்பு சம்பம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

தாயின் கண்முன்னே மகன் வெடிவிபத்தில் சிக்கிய சம்பவம்

வட்டுவாகல் பாலத்தில் குளிர்பான வியாபாரம் செய்யும் செல்வபுரத்தினை சேர்ந்த ஒரு தாயின் மகனே கண்முன்னே இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இந்த குடும்பம் நீண்டகாலமாக வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் சர்பத்,இளநீர் வியாபராம் செய்து வருகின்றார்.

தனது பிள்ளையினை பறிகொடுத்த தாயார் இது குறித்து மருத்துவமனையில் பொலீசாருக்கு தகவல் கொடுக்கையில் தனது பிள்ளையும் அவனின் நண்பனுமான வட்டுவாகல் கிராமத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் தன்னிடம் சர்பத் தயாரிக்குமாறு சொல்லிவிட்டு அருகில் சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள இடத்திற்கு நடந்து சென்றுள்ளார்கள்.

திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அருகில் எவரும் இல்லை. நான் ஓடிச்சென்று பார்த்தேன். எனது மகன் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடப்பதுடன் அவனது நண்பனும் காயமடைந்து கிடக்கின்றார்கள்.

எனது மகனின் காலில் இரண்டு இடங்களில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தம் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அருகில் கோட்டபாய கடற்படை தளம் இருந்தது. இந்த மகன்களை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன். கடற்டையினர் எவரும் உடனடியாக வந்து இரண்டு உயிர்களையும் காப்பாற்ற முன்வரவில்லை. உடனே வீதியில் சென்றவர்களின் உதவியுடன் சிறிய வாகனம் ஒன்றில் இருவரையும் ஏற்றியபோதுதான் கடற்படையினர் வந்து படம் எடுக்கின்றார்கள் என்று தயார் கதறி அழுதார்.

இன்னிலையில் இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் மற்றும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதுடன் குறித்த பகுதி அபாய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு இளைஞர்களின் தலைக்கவசம், பாதணி ஆகிய காணப்படுவதுடன் வெடிப்பு சம்பவத்தின் சிதறல்கள் அருகில் உள்ள மரங்களில் சிதறு துண்டங்கள் பட்டு இருப்பததையும் அவதானிக்க முடிந்துள்ளது.

.சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வெடிமருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்