தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது. அங்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 42 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார மையம் இன்று முதல் 03 நாட்கள் மூடப்படும்
மீகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மீகாவத்தை பொலிஸ் நிலையம் தற்காலிகாக மூடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாததற்காக கிட்டத்தட்ட 40 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்படும் மையங்களில் பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகடாக நிறுத்த்பட்டுள்ளது.
அடுத்த 2 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட அனைத்து அரச செயல்பாடுகளும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைத்து தனியார் செயல்பாடுகளும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் தடைசெய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இன்று மேலும் 783 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மோத்த எண்ணிக்கை 101,369 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளை ஈகானெல்லிங் மூலம் அல்லது “225” அல்லது “1225” டயல் செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்கள் கடுமையான விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவிததுள்ளார்.
திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்-