25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

தனக்குத்தானே பதவி வழங்கிய கட்சி தாவியுடன் தொடர்பில்லை: தமிழ் அரசு கட்சி விளக்கம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஆசனம் கிடைக்கவில்லையென்பதற்காக கட்சி தாவி பிறிதொரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, தற்போது சுமந்திரன் அணியுடன் ஒட்டியுள்ள நபர் ஒருவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் அமைப்பாளர் பதவியெதிலும் இல்லையென, அந்த கட்சி விளக்கமளித்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) அதன்  பணிமனையில் இடம்பெற்றது.

இந்த கூட்டம் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்-

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) அதன்  பணிமனையில் இடம்பெற்றது.

இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் எனத் தம்மை அடையாளப்படுத்தி ஒருவர் தமது முகநூலில் பதிவிட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பு விதிகளின்படி அதன் எந்தக் கட்டமைப்பிலும் அமைப்பாளர் என்ற பதவி இல்லை என்பதும் இந்தச் செயல் தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான, தவறான முன்னெடுப்பாகும் என்பதும் கூட்டத்தில் பங்குபற்றியோரால் ஒருமனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தவறான செயற்பாட்டை சுட்டிக்காட்டி ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்படல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்

east tamil

Leave a Comment