மன்னாரில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர் பதவி உயர்விற்கான பரீட்சைக்கு தோற்ற பிரத்தியேக ஏற்பாடு!

Date:

மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் தனது பதவி உயர்விற்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(23) யாழ்ப்பாணத்தில் பரீட்சைக்காக தோற்ற வேண்டிய நிலை காணப்பட்டது.

எனினும் தென் பகுதியை சேர்ந்த குறித்த நபர் சுய தனிமை படுத்தப்பட்டமையினால் குறித்த பரீட்சையையும், பதவி உயர்வையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் குறித்த நபரின் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்களின் கனத்திற்கு கொண்டு வந்தார்.

துரித முயற்சிகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் மின்சார சபை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த பணியாளர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மோட்டக்கடை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலேயே பரீட்சைக்கு தோற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில், சுகாதார நடை முறைகளுடன் குறித்த மின்சார சபை பணியாளர் பரீட்சை எழுதி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்