கர்ப்பகாலத்தில் உடலும் மனமும் பெரிய மாற்றத்தை சந்திக்கும். இந்த காலத்தில் குங்குமப்பூ எடுத்துகொள்வதால் என்ன மாதிரியான நன்மைகள் உண்டாகும் எவ்வளவு வரை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.
உணவுக்கு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொடுப்பதோடு நிறத்தையும் அளிக்கிறது. மேலும் செரிமானம் போன்ற சுகாரதார பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. மேலும் அழகு சார்ந்த விஷயங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பகாலத்தில் குங்குமப்பூ எடுத்துகொள்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மனநிலை மாற்றங்களை குறைக்கிறது
கர்ப்பம் உடலில் பல ஹார்மோன் மாற்றங்களை தூண்டுகிறது. அது கர்ப்பகால உணர்வுகளில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக மன ரீதியில் பாதிப்பு நேரிடுகிறது. இவை அதிகரிக்காமல் உங்கள் மனதை அமைதிபடுத்தவும் இயல்பாக வைத்திருக்கவு குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூ மன அழுத்த எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. குங்குமப்பூவை உட்கொள்வது உங்கள் மனநிலையை உயர்த்தகூடும். செரோடோனின் என்னும் ஹார்மொன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோனை குறைக்கவும் செய்கிறது.
இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கிறது
கர்ப்பகாலத்தில் பெண்ணின் இதயத்துடிப்பு 25% வேகமடையக்கூடும். இதனால் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். குங்குமப்பூவில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பொட்டாசியம் மற்றும் குரோசெட்டின் உள்ளது. இது கர்ப்பகாலத்தில் நன்மை பயக்க கூடும். கர்ப்பகால இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க குங்குமப்பூவை அளவாக எடுத்துகொண்டால் போதுமானது.
காலை வியாதியை அமைதிப்படுத்துகிறது
காலை நோய் பெரும்பாலும் கர்ப்பகால சோர்வை வெகுவாக அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணிகள் அதிக சோர்வையும் மயக்கத்தையும் எதிர்கொள்வதுண்டு. குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கும் தேநீர் தலைச்சுற்றலை எதிர்த்து போராட உதவுகிறது. இது குறித்து ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
செரிமானம் மேம்படுத்துகிறது
கர்ப்பகாலத்தில் பெரும்பான்மையான பெண்கள் வயிற்று வலி உபாதை செரிமானத்துக்கு ஆளாகிறார்கள். கர்ப்பகாலத்தில் செரிமானம் குறைவாக கூடும். கர்ப்பகாலத்தில் உணவை பகுதி பகுதியாக பிரித்து சாப்பிட காரணமே செரிமானம் எளிதாகும்.
குங்குமப்பூ செரிமான அமைப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இவை உதவுகிறது. கர்ப்பகாலத்தில் செரிமானம் சீராக குங்குமப்பூ உதவும்.
செரிமான மண்டலத்தில் பாதுகாப்பு பூச்சு உருவாக காரணமாகிறது. இந்த கூடுதல் பூச்சு இரைப்பை குடல் அமிலத்தன்மையை ஆற்ற செய்கிறது. இது வீக்கத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
தசைப்பிடிப்புகளை குறைக்கும்
கர்ப்பிணி பெண் பிரசவத்துக்கு முன்பு இலேசானது முதல் கடுமையான பிடிப்பு வரை அனுபவிக்கிறார்கள். கர்ப்பம் முழுவதும் எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ந்து குழந்தையின் வளர்ச்சிக்கு இடம் அளிப்பதில் சிரமத்தை சந்திக்கின்றன.
மேலும் இது வயிறு மற்றும் இடுப்பு மூட்டுகளில் வலிகள் மற்றும் பிடிப்புகளை உண்டாக்கும். குங்குமப்பூ ஒரு இயற்கை வலி நிவாரணி. இது தசைகளை தளர்த்தும் வயிற்றுவலியை போக்க உதவும். மேலும் பிடிப்புகளை தடுக்கும்.
இதயநோய்களுக்கு எதிரான பாதுகாப்பு
குங்குமப்பூ இதய நோய்களிலிருந்து பாதுகாக்க செய்யும். கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிகரித்த பசியை நிறைவு செய்ய அதிக கொழுப்பு மிக்க உணவுகளை எடுத்துகொள்வதுண்டு. இது அவர்களது இதய அமைப்பில் தீங்கு விளைவிக்க கூடியவை.
குங்குமப்பூவில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் குரோசெட்டின் மற்றும் பொட்டாசியம் உடலில் ட்ரைகிளிசரைடு மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன.
சுவாச நோயை குணப்படுத்துகிறது
குங்குமப்பூவில் நாசி காற்றுப்பாதைகளை விரிவாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நுரையீரல் வீக்கம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் தெளிவான சுவாசத்தை எதிர்கொள்ளலாம். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பு நீக்குவதன் மூலம் குங்குமப்பூ உதவலாம்.
தூக்கத்தை மேம்படுத்தும்
கர்ப்பகாலத்தில் தூங்குவது சவாலாக இருக்கும். குழந்தை வளர்ந்துவரும் போது வயிறு அமுங்காமல் இருக்க எச்சரிக்கையாக தூங்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான படுக்கையறை அமைத்தாலும் தூக்கம் என்பது சவாலானதாக இருக்கலாம்.
ஹார்மோன் எழுச்சிகளின் விளைவுகளை சமாளிக்கவும், எலும்புகளை நீட்டுவதன் அசெளகரியத்தை குறைக்கவும் வலி, அசெளகரியமும் தூக்கத்தில் தலையிடலாம். குங்குமப்பூ சேர்த்த பால் குடிப்பதன் மூலம் தூக்கத்தை வரவழைக்கலாம். இலேசான மயக்க மருந்து பண்புகள் குங்குமப்பூவில் உண்டு. இது நிம்மதியான உறக்கத்தை உண்டாக்கும். பாலுடன் குங்குமப்பூ கலந்து குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த செய்யும்.
கர்ப்பகால அழகு பிரச்சனை
முடி உதிர்தலை குறைக்கிறது. ஹர்மோன் ஏற்றங்கள் பெரும்பாலும் முடி உதிர்வதற்கு காராணமாகின்றது. பல கர்ப்பிணி பெண்களிடையே முடி உதிர்வு என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. பால், குங்குமப்பூ சேர்த்து எடுக்கும் போது அந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் முடியை வளர்த்து வலிமையாக்க செய்கிறது.
சரும பிரச்சனைகளை குணப்படுத்தவும் குங்குமப்பூ உதவுகிறது. இது சரும பிரச்சனைகளுக்கு எதிராக போராட உதவுகிறது. கர்ப்பகாலத்தில் முகப்பருக்கள், மெலஸ்மா போன்ற பிரச்சனைகளை இல்லாமல் செய்கிறது.