29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
உலகம்

உலகின் அதிக விலைமதிப்பு கொண்ட காளான்கள்!!

காளான்கள் என்று சொன்னாலே, அதில் உள்ள சத்துக்கள் தான் நம் நினைவிற்கு வரும். நம் உடலுக்கு நன்மைபயக்கும் அதிகப்படியான சத்துக்கள், காளான்களில் அதிக அளவில் உள்ளன.

மேலைநாடுகளில், காளான்களை கொண்டு உயர்தர உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவு வகைகளை தயாரிக்க விலை உயர்ந்த காளான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

க்யூச்சி காளான் :

இந்த வகை காளான்கள், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் அதிகம் கிடைக்கின்றன. மார்ச் – மே மாதங்களில் வனப்பகுதிகளில. இருந்து சேகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இது கிலோ ரூ. 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

யார்ட்ஷா குங்பு

ஆங்கிலத்தில் கேட்டர்பில்லர் பங்கஸ் எனவும், திபெத்திய மொழி அடிப்படையில் கோடைப்புல் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது ஹிமாலய மலைத்தொடரை ஒட்டியுள்ள இந்தியா, நேபாளம், பூடான் நாடுகளில் அதிகம் கிடைக்கிறது. இது ஒரு கிலோ ரூ. 15 லட்சம் அளவிற்கு விலைபோகிறது.

யூரோப்பியன் ஒயிட் டுரபிள்

ஐரோப்பாவில் அதிகம் கிடைக்கும் இந்த வகை காளான் ஓக் மரத்தின் அடிப்பகுதியில் வளர்கின்றன. இது அரிதான வகையாக உள்ளது. இது கிலோ ஒன்றிற்கு ரூ.4,50,000 என்ற அளவில் விலை உள்ளது.

மட்சுடேக் காளான்கள்

ஜப்பான் நாட்டின் கியாட்டோ பகுதியில் இந்த காளான் அதிகளவில் கிடைக்கிறது. ஒரு பவுண்டு காளானின் விலை ரூ. 75 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை உள்ளது.

மோரல் காளான்கள்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை காளான்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த காளான் கிலோ ரூ. 36 ஆயிரம் வரை விலைபோகிறது.

சான்டெரில்லி காளான்கள்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இது பார்ப்பதற்கு, சிப்பிக்காளான் போன்றே இருக்கும். சிவப்பு, மஞ்சள் நிறங்களில் உள்ள இந்த காளான் கிலோ ரூ.1,200 அளவிற்கு விலைபோகிறது.

எனோக்கி காளான்கள்

ஜப்பான் உணவு வகைகளில் இந்த காளான் தவறாது இடம்பெற்று விடுகிறது. இது கொத்து கொத்தாக வளர்க்கப்படுகிறது. இந்த காளான், கிலோ ரூ. 2 ஆயிரம் என்ற அளவில் விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!