26.3 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

கைது செய்து விட்டு காரணம் தேடும் கேலிக்கூத்தை நிறுத்துங்கள்!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரிஷாட் பதியுத்தீன்  சி ஐ டி யினரால் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அவரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகருக்கு அறிவிக்கப்படாமல் நீதிமன்ற பிடியாணை எதுவுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த பாதுகாப்புத் துறை நடந்து கொள்வது இந்த துறைகள் தேசிய நலனில் அக்கறையின்றி ஆட்சியாளரின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாக  இயங்கும் இயந்திரமாகியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னைய ராஜபக்ஷ  அராஜக ஆட்சியின் இரண்டாம் கட்டம் கோவிட் வைரஸை விட மோசமாக கோரத்தாண்டவமாடுவதை இது உறுதிப்படுத்துகின்றது. கைது செய்துவிட்டு காரணம் தேடுகின்ற காட்டு நீதி தான் 69 இலட்சம் மக்களது எதிர் பார்க்கை என்பது போல அரசாங்கம் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். தமது ஆதரவாளர்கள் என்பதற்காக குற்றவாளிகளை விடுதலை செய்து விட்டு தமக்கு வேண்டாதவர்களை கைது செய்தபின் காரணம் தேடுகின்ற கேலிக்கூத்தை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தம்

east tamil

துமிந்த சில்வா சிறை அறைக்கு மாற்றம்!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்துக்குள் நுழைய சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment